வழிய வழிய எண்ணை வைத்து சும்மா அரப்பு போட்டு தேய்ச்சு விட்டா காத்துல அப்படியே சில்லுன்னு பறக்கும் என்னுடைய முடி, பக்கத்துக்கு வீட்டு ஆண்டில இருந்து எதிர்த்த வீட்டு பாட்டி வரை என் தலயப்பதி பேசாதவன்களே இல்லை.
அன்னிக்கும் அப்படித்தான் குளிக்க வெச்சாங்க, புது டிரஸ் போட்டு விட்டு காலையிலேயே எல்லாரும் நேரத்திலேயே ரெடி ஆகி போனோம். ரொம்ப ஜாலியா வேடிக்கை பாத்திட்டே வந்தேன். கோவில்க்கு போனோம், சாமி கும்பிட்டோம், நெறையா பேர் வந்தாங்க என்னை மாத்தி மாத்தி எடுத்தாங்க. கடைசில புது டிரெஸ்ஸை கழட்டி, தலையில தண்ணி தெளிச்சு மசாஜ் பண்ணி விட்டாங்க அப்படியே புருபுருன்னு இருந்திச்சு கொஞ்சம் அசந்தேன் தலையில கை வச்சி பாத்தா மொழுக்குன்னு இருக்கு, அப்போதான் புரிச்சுது ஆஹா சாச்சுப் புட்டங்கயா.
ஹும்ம்ம்ம் எப்படி இருந்த நான்........
ஹும்ம்ம்ம் எப்படி இருந்த நான்........
.jpg)

