என் காலை நேரம் - சிறு சத்தம் கூட என்னை விழிக்க செய்துவிடும். என் பாட்டியின் சமையலறை ஓசை , வீதியின் டூ வீலர் சவுண்ட், பறவைகள் சத்தம் இதெல்லாம் என்னை 8 மணிக்கே எழுப்பிவிடும், எல்லாரும் என்னை சுத்தி நடந்துக்கிட்டே இருக்காங்க ஆனால் யாருமே என்னை எடுக்க
மாட்டார்கள்:: ( நான் அவர்களை கூப்பிட்டு கூப்பிட்டு கலைச்சு போயிடுவேன்.. அம்மாவும் பாட்டியும் ஏதோ பேசிட்டுத்தானே இருக்கான் அழும்போது எடுத்துக்கலாம்னு என் காது படவே சொல்லுவாங்க. நானும் தான் எவ்வளவு நேரம் நல்லவனாவே நடிக்கறது. ஒரு ஹை பிட்ச் சவுண்ட் விட்டேன். அப்புறம் தான் மெதுவா வந்து என்னை எடுத்துக்கிட்டாங்க. இவங்களுக்கு பனிஷ்மென்ட் குடுத்தே தீரனும் என்ன பண்ணலாம் ம்ம்ம்ம்.. ஐடியா ..... chuuu chuuu போயிட்டேன். ஹிஹிஹி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக